பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையொட்டி எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகளை, தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் இன்று ஆய்வு செய்தார்.;
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையொட்டி எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகளை, தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் இன்று ஆய்வு செய்தார்.
ஒரத்தூர், ஆரம்பாக்கம் ஏரிகள், அடையாறு ஆற்றில் நடைபெறும் பணிகள் மற்றும் தாம்பரம் தர்காஸ் சாலை, பாப்பன் கால்வாய் பணிகளை ஆய்வு செய்த சத்யகோபால், பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.