போதை இளைஞர்களால் நடு வழியில் நின்ற ரயில்...

ஓமலூர் அருகே, மது போதையில் ரயில்வே கேட்டை திறக்கச் சொல்லி ரகளை செய்த இளைஞர்களால் சரக்கு ரயில் ஒன்று நடுவழியில் நிறுத்தப்பட்டது.

Update: 2018-10-04 22:35 GMT
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள மாணத்தாள் ரயில்வே கிராசிங்கில், கேட் கீப்பராக பணிபுரிந்து வரும் சந்திரசேகரன், சரக்கு ரயிலுக்காக லெவல் கிராசிங்கை இன்று காலை மூடியுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள், கேட்டை திறக்கச் சொல்லி, ரகளையில் ஈடுபட்டுள்ளனர். சந்திரசேகரன் மறுத்ததால், போதையில் இருந்த அந்த இளைஞர்கள், அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்த Panel Board-யை அவர்கள் உடைத்துள்ளனர். இதனால், ரயில் சிக்னல் வேலை செய்யவில்லை. சிக்னல் கிடைக்காததால், ஓமலூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில், நடு வழியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு சிக்னல் சரி செய்யப்பட்டு ரயில் புறப்பட்டு சென்றது. தாக்கப்பட்ட கேட் கீப்பர் சந்திரசேகரை மருத்துவமனையில் போலீசார் அனுமதித்துள்ளனர். தப்பியோடிய இளைஞர்களை தேடி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்