மீன்பாடி வாகனங்கள் இயக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்

மீன்பாடி வாகனங்கள் இயக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக போக்குவரத்துத் துறை மற்றும் காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Update: 2018-09-28 08:14 GMT
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த வழக்கில் 2008 ஆம் ஆண்டு மீன்பாடி வாகனங்களுக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை காவல் துறையும், போக்குவரத்துத் துறையும் அமல்படுத்தவில்லை எனக் கூறி, டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதிகள் வேணுகோபால், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டவிரோதமாக மீன்பாடி வாகனங்களை இயக்கினால் நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், சென்னை மட்டுமல்லாமல், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மீன்பாடி வாகனங்கள்  இயக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், சட்டவிரோதமாக இயக்கப்படும் மீன்பாடி வாகனங்களை பறிமுதல் செய்து, அவற்றின் இன்ஜினை அழித்து விட வேண்டும் எனவும் காவல் துறையினருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகளுக்கு எதிராக துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்