"தந்தையின் போர்வையில் திமுகவின் தலைவரானவர் ஸ்டாலின்" - முதலமைச்சர் பழனிசாமி

திமுக ஒரு கட்சியே அல்ல என கூறிய அவர், அது ஒரு கம்பெனி என்றார்.;

Update: 2018-09-25 17:44 GMT
திமுக ஒரு கட்சியே அல்ல என கூறிய அவர், அது ஒரு கம்பெனி என்றார்.
மு.க.ஸ்டாலினால், தமிழகத்தில் ஒருபோதும் முதலமைச்சர் ஆக முடியாது என குறிப்பிட்ட எடப்பாடி பழனிச்சாமி, வருகிற தேர்தலில், அதிமுக தனது பலத்தை நிரூபித்து காட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார். திமுகவில், கருணாநிதி - மு.க. ஸ்டாலின் - உதயநிதி என குடும்ப அரசியல் தொடருவதாக குற்றஞ்சாட்டிய அவர், திமுக கொள்கை இல்லாத கட்சி என்று விமர்சித்தார். மாம்பழத்தில் வண்டு துளைக்கலாம் - ஆனால் இரும்புக்கோட்டையில் எதுவும் நுழைய முடியாது என்று அவர்  உறுதிபட கூறினார். தினசரி காலை 9 மணி முதல் இரவு 12 மணி வரை, மக்களுக்காக தாம் பணியாற்றுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார்.அதிமுகவில், குற்றம் கண்டு பிடிக்க, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பூதக்கண்ணாடியை வைத்து தேடிக்கொண்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டி உள்ளார். திமுக - காங்கிரஸ் கூட்டணியை கண்டித்து, சேலத்தில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், முந்தைய திமுக ஆட்சியை வெகுவாக விமர்சித்தார்.  பழைய நிகழ்வுகளை தோண்டினால், திமுகவுக்கு கடும் சிக்கல் உருவாகும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்