பள்ளி படிப்பை தொடர முடியாதவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி - தமிழக அரசு அறிவிப்பு

எட்டு மற்றும் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தும் மாணவ மாணவிகளுக்கு, இலவச லேப்டாப், 500 ரூபாய் உதவித்தொகை உள்ளிட்டவைகளோடு வேலைவாய்ப்புக்கான பயிற்சிகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2018-09-14 05:23 GMT
* பத்தாம் வகுப்பு நிறைவு செய்த மாணவர்களுக்கு,  கருவிகளை பழுதுப்பார்த்தல், தொலைதொடர்பு சாதனங்களை பராமரித்தல், சுருக்கெழுத்தர், செயலக உதவியாளர், எம்பிராய்டரி பயிற்சி, ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட இரண்டு ஆண்டு கால பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

* இதேபோல, எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திய மாணவ மாணவிகளுக்கு, தையல் மற்றும் மேற்பரப்பு அலங்கார பயிற்சி வழங்கப்படுகின்றன. இந்தப் பயிற்சியின் காலம் ஒரு வருடமாகும்..

* பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு அரசே வேலைவாய்ப்பை உருவாக்கி தரும். பயிற்சிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

* பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, இலவச லேப்டாப், சைக்கிள், புத்தகங்கள், கருவிகள், இலவச பஸ் பாஸ், சீருடைகள் மற்றும் காலணிகள் ஆகியவற்றுடன் மாதம் 500 ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படும்.

* இந்தப் பயிற்சிகள் அனைத்தும் சென்னை கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தில் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்