சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பு குறித்த தீர்ப்பு - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதாவின் படத்தை சட்டப் பேரவையில் திறக்க அனுமதி வழங்கிய தீர்ப்பை ஒப்பிட்டு நினைவிட வழக்கில் முடிவெடுக்க கூடாது என்ற மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2018-09-12 13:36 GMT
அரசு செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க கூடாது என கூறி தேசிய மக்கள் கட்சி தலைவர் ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபகள் ஹுலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அதில், சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்தை திறக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என  வழங்கிய தீர்ப்போடு இந்த வழக்கை ஒப்பிடக் கூடாது என கூறப்பட்டது. மேலும், ஜெயலலிதா நினைவிடம்  பொது இடத்தில் அமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூடுதல் மனுவுக்கு அக்டோபர் 5ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்