விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பகவத் விநாயகருக்கு பல வண்ணங்களால் ஆன பண அலங்காரம்...

காஞ்சி மகா பெரியவரால் வணங்கப்பட்ட பகவத் விநாயகருக்கு பக்தர்கள் காணிக்கையாக அளித்த பல வண்ணங்களால் ஆன ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

Update: 2018-09-10 02:13 GMT
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 16 ஆம் நூற்றாண்டில் பகவான் முனிவரால் கட்டப்பட்டு, காஞ்சி மகா பெரியவரால் வணங்கப்பட்ட பகவத் விநாயகருக்கு பக்தர்கள் காணிக்கையாக அளித்த பல வண்ணங்களால் ஆன ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆறாம் ​நாளான நேற்று செய்யப்பட்ட இந்த அலங்காரம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் செய்யப்பட்டு இருந்த அலங்காரத்தை பார்த்து வியந்து, தங்களது செல்போனில் படம்பிடித்துச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்