விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் - போதிய மண் கிடைத்தும் கெடுபிடியால் தொழில் பாதிப்பு

தென்காசி அருகே மண்பாண்ட தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

Update: 2018-09-08 19:42 GMT
நெல்லை மாவட்டம் தென்காசி, இலஞ்சி, செங்கோட்டை, சுந்தரபாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்ட தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றன. மண்பானை, அடுப்பு, பூந்தொட்டி போன்ற தொழில்களை செய்வதன் மூலம் இவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். ஆனால் ஆண்டுந்தோறும் வரும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது அவர்கள் விநாயகர் சிலைகளை செய்வதும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சிலைகளை செய்யும் பணியில் அவர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். ஆனால் பல நேரங்களில் சிலைகள் செய்வதற்கான மண் கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
தங்கள் வாழ்வாதாரத்தை காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்