தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிரம்பாமல் 284 பி.டி.எஸ். இடங்கள்
பதிவு: ஆகஸ்ட் 31, 2018, 09:36 AM
நடப்பு கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை முடியும் தருவாயில் உள்ளது.  எம்.பி.பி.எஸ்., இடங்கள் முழுமையாக நிரம்பிவிட்ட நிலையில் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 284 பி.டி.எஸ். இடங்கள் இன்னமும் நிரம்பாமல் உள்ளன. அந்த இடங்களுக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள், செப்., 9 ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜன் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ்கள் மற்றும் காசோலையுடன் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.