உள்நாட்டில் உருவான "வீரா" ரோந்து கப்பல் காவல்படையிடம் ஒப்படைப்பு

சென்னை அருகே 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்றாவது ரோந்து கப்பல் கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டது

Update: 2018-08-28 13:47 GMT
சென்னையை அடுத்த மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் கப்பல் கட்டும் நிறுவனத்தில் 187 கோடி ரூபாய் செலவில் இந்திய தொழில் நுட்பத்தில் 'வீரா' என்ற அதிநவீன ரோந்து கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. 

'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த மூன்றாவது ரோந்து கப்பலை கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.  கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய கூடுதல் இயக்குனர் ஜெனரல் நாட்டியால் கலந்து கொண்டு கப்பலை பெற்று கொண்டார். 2 ஆயிரத்து 100 டன் எடை கொண்ட 'வீரா' கப்பலில் நவீன திசைகாட்டும் கருவிகள் , கண்காணிப்பு கருவிகள் இடம் பெற்றுள்ளன. இதுபோல, 7 ரோந்து கப்பல்களை தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஏற்கனவே விக்ரம், விஜயா என்ற 2 கப்பல்கள் ஒப்படைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்