பள்ளிகளை தத்தெடுக்க முன்னாள் மாணவர்கள் ஆர்வம் - அமைச்சர் செங்கோட்டையன்

கல்வி கற்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க யுனெஸ்கோவுடன் இணைந்து பயமில்லா கற்றல் விழிப்புணர்வு விளம்பரங்கள் 57 ஆயிரம் அரசு பள்ளிகளில் வைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

Update: 2018-08-27 12:21 GMT
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், " பயமில்லா கற்றல் " அடிப்படையில் பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துவருவதாக தெரிவித்தார்.  யுனெஸ்கோ மூலமாக நல்ல தொடுதல், தவறான தொடுதல் குறித்து அனைத்து பள்ளிகளிலும் விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது ஏதேனும் இடற்பாடுகள் ஏற்பட்டால் 14417 என்ற உதவி எண்ணுக்கு அழைக்கலாம் என்றும் அவர் கூறினார்.  தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் மெஷின்கள் 
வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,பள்ளிகளில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்யும் 100 வாகனங்கள் ரோட்டரி கிளப் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு தயாராக உள்ளதாக அவர் கூறினார். சிறப்பு ஆசிரியர்கள் தேர்வில் தவறு நடந்திருப்பதாக ஆதாரத்துடன் நிரூபித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமிழகத்திற்கான நல்லாசிரியர் விருதுகளின் எண்ணிக்கையை மீண்டும் 32 ஆக அதிகரிக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாகம் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்