பெற்ற மகனை கருணை கொலை செய்ய கோரும் தாய் - கண்ணீர் பேட்டி
பதிவு: ஆகஸ்ட் 23, 2018, 02:02 PM
கடலூர் மாவட்டம் சோழதரம் கிராமத்தை சேர்ந்த திருமேணி-சசிகலா தம்பதி. இவர்களுக்கு கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த சிறுவனுக்கு10 வயதாகியும் எழுந்து நடக்க முடியவில்லை. தாய் தந்தையை கூட அடையாளம் தெரியவில்லை. 

பிரசவத்தின் போது மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையே இதற்கு காரணம் என தம்பதி குற்றம்சாட்டுகின்றனர். எழுந்த நடக்க முடியாத தம்பியை பார்த்து இரு சகோதரிகள் மன உளைச்சலுக்கு ஆளாகுவதாக சசிகலா வேதனை தெரிவிக்கிறார். 

சொத்தை விற்று சிறுவனுக்கு சிகிச்சை அளித்தும் பலனில்லை எனவும் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது தான் மிச்சம் என திருமேணி கண்கலங்குகிறார். எழுந்து கூட நடக்க முடியாத, தாய் தந்தையை அடையாளம் தெரியாத சிறுவனை கருணை கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.