அரசு மருத்துவமனையில் மாணவர் தற்கொலை

சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ் காந்தி அரசுமருத்துவமனையின் மாடியில் இருந்து குதித்து, பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2018-08-22 09:36 GMT
சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் மாடியில் இருந்து குதித்து, பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்த சேட்டன்குமார் என்பவர், சென்னையில் பொறியியல் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். இன்று காலை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்த அவர், மாடியில் இருந்து குதித்தார். படுகாயமடைந்த அவர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்