எம்.பி.பி.எஸ் படிப்பில் 30 அரசுப் பள்ளி மாணவர்கள்

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள், கூடுதலாக எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-08-21 14:08 GMT
இந்தாண்டு எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிந்து விட்டது. அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 26, 27 தேதிகளில் நடக்கிறது. இந்நிலையில், மருத்துவ படிப்பில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை, மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜன் தெரிவித்து்ள்ளார்.

அதன்படி, அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் 4 பேர், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளதாகவும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்த 26 மாணவர்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள் 17 பேர் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்த நிலையில் இந்த ஆண்டு 30 பேர் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்