"கட்டாய ஹெல்மெட் சட்டம் - கிரண் பேடிக்கு அதிகாரம் இல்லை"
பதிவு: ஆகஸ்ட் 14, 2018, 04:09 PM
புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த உத்தரவு போடும் அதிகாரம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு இல்லை என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.  புதுச்சேரியின் முதல் முதலமைச்சர் எதுவார் குபேரின் நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி பாரதி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு,  நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹெல்மெட் அணிவது குறித்து அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், கிரண்பேடி தனிப்பட்ட முறையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.