ஸ்ரீரங்கம் சமயபுரம் கோவில் முறைகேடு வழக்கு

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடந்த முறைகேடு தொடர்பாக, ஸ்ரீரங்கம் கோவில் அறநிலைத்துறையில் உதவி ஆணையராக பணியாற்றிய ரத்தினவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2018-08-03 02:24 GMT
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 2010ம் ஆண்டு நடைபெற்ற தங்க குதிரை அமைத்தல், தங்க கோபுரம் அமைத்தல், தங்க தேர் ரதம் பிரித்து மராமத்து வேலை செய்தல், போன்ற பணிகளில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது தொடர்பாக அப்போது சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பணியாற்றிய இணை ஆணையர் பாரதி, நகைசரிபார்ப்பு இணை ஆணையர் இளம்பரிதி, நகை மதிப்பீட்டாளர்  தர்மராஜ் மற்றும் அலுவலக மேலாளராக இருந்த ரத்தனவேல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தற்போது ரத்னவேல், ஸ்ரீரங்கம் அறநிலைத்துறை உதவி ஆணையராக பணியாற்றி வந்த நிலையில், சமயபுரம் கோவில் முறைகேடு வழக்கு நிலுவையில் உள்ளதால் அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ரத்தினவேலின் பணிக்காலம் ஜூலை 31ம் தேதி முடிவடைந்தது. ஆனால் அவர் அன்றைய தினத்தில் இருந்தே அவர் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்