ஆடிப்பெருக்கு விழாவிற்காக ஒகேனக்கலில் மாவட்ட ஆட்சியர் பரிசலில் ஆய்வு

ஒகேனக்கலில் ஆடிபெருக்கு விழாவிற்காக சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்யவும், நீர்வீழ்ச்சியில் நீராடவும் விதித்த தடையை நீக்க மாவட்ட ஆட்சியர் ஒகேனக்கலில் ஆய்வு செய்தார்.

Update: 2018-08-02 02:46 GMT
கர்நாடக மாநிலத்தில் பெய்து வந்த கனமழையின் விளைவாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் கடந்த 24 நாட்களாக தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை)  ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் நீராடவும், பரிசல் சவாரி செய்யவும் தடையை நீக்குவது குறித்து ஆலோசித்தனர்.

அதற்காக மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமையில், மாவட்ட 
காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அதிகாரிகள் குழுவாக பரிசலில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.இந்நிலையில் வரும் மூன்றாம் தேதி ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு அன்று மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்