தேசிய அளவிலான நாணயவியல் கண்காட்சி தொடக்கம்
சென்னை சாலிகிராமத்தில், சென்னை நாணயவியல் கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு தேசிய அளவிலான நாணயவியல் கண்காட்சி நடைபெற்று வருகிறது.;
நாகரீகம், கலை உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு காட்சி படுத்தும் வகையில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. இன்று முதல் ஞாயிறு வரை இந்த கண்காட்சி நடைபெறும். கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள ஏராளமான பழங்கால நாணயங்கள், தபால் தலைகள் மற்றும் பழங்கால பொருட்களை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.