"2036-ல் ஒலிம்பிக்கை எளிதாக நடத்தும் நிலையில் இருப்போம்" - பிரதமர் மோடி உறுதி | Modi | 2036 Olympics
கோவாவின் மார்கோவாவில், 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், உலக விளையாட்டரங்லில் இந்தியா புதிய உச்சங்களை எட்டி வருவதாக குறிப்பிட்டார். இந்தியா மிகப்பெரிய நாடாக இருந்த போதிலும், சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பின் தங்கியே இருந்ததாக கூறிய அவர், எனவே தாங்கள் 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர், விளையாட்டு கட்டமைப்புகள் மற்றும் விளையாட்டுத்துறை செயல்முறைகளில் மாற்றத்தை கொண்டு வந்ததாக தெரிவித்தார். இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, கடந்த 9 ஆண்டுகளை காட்டிலும் மும்மடங்கு அதிகம் எனவும் குறிப்பிட்டார். ஒவ்வொரு துறையிலும் புதிய சாதனை படைத்து வரும் இந்தியாவின் வேகத்துடன் போட்டி போடுவது, கடினம் என தெரிவித்த பிரதமர் மோடி, 2036 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரமும், விளையாட்டு கட்டமைப்புகளும், ஒலிம்பிக்கை எளிதாக நடத்தும் நிலையில் இருக்கும் என உறுதி தெரிவித்தார்