மகுடம் சூடப்போவது கொல்கத்தாவா? ஐதராபாத்தா? - குறுக்கிடுமா மழை..? - காத்திருக்கும் ரசிகர்கள்

Update: 2024-05-26 08:15 GMT

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் திருவிழா, நிறைவு நாளை எட்டிவிட்டது. இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் தகுதி பெற்றுள்ள சூழலில், சென்னை சேப்பாக்கத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது. இரண்டு முறை சாம்பியனான கொல்கத்தா அணி, பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் வலுவாக உள்ளது. அதிரடி தொடக்கமும், சுழற்பந்துவீச்சு தாக்குதலும் அந்த அணியின் பலமாக பார்க்கப்படுகிறது. மறுபுறம், குவாலிபயரில் கொல்கத்தாவிடம் தோல்வி அடைந்தாலும், மீண்டு எழுந்து அடுத்தடுத்து 2 வெற்றிகள் மூலம் இறுதிப்போட்டிக்கு வந்துள்ள ஐதராபாத் அணியும் சமபலம் பொருந்திய அணியாக வலம் வருகிறது. இந்த சூழலில், மழை காரணமாக வீரர்களின் பயிற்சி நேற்று தடைப்பட்ட நிலையில், இன்றும் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை மழையால் போட்டி தடைபட்டால் ரிசர்வ் டே கடைப்பிடிக்கப்படும். 

Tags:    

மேலும் செய்திகள்