ஒத்த ஆளு.. ஒரேயொரு ஆளு..கம்பீர் முகத்துல `ஈ' ஆடலயே - KKR-ஐ சிதைத்த அசகாய சூரன் பட்லர்

Update: 2024-04-17 07:25 GMT

ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஜாஸ் பட்லரின் அபார சதத்தால் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய சுனில் நரைன், ராஜஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்து 56 பந்துகளில் 6 சிக்சர்கள், 13 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் சேர்த்தார்.இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 223 ரன்கள் குவித்தது.இமாலய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், ஜெய்ஸ்வால் 19 ரன்களும், கேப்டன் சாம்சன் 12 ரன்களும், இளம் வீரர் ரியான் பராக் 34 ரன்களும் சேர்த்தனர்.9வது ஓவரில் ராஜஸ்தான் அணி 100 ரன்களை கடந்தாலும், சீரான இடைவேளையில் விக்கெட் வீழ்ந்ததால், மிடில் ஓவர்களில் வேகமாக ரன்கள் சேர்க்க முடியாமல் தடுமாறியது.இருப்பினும், தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் பொறுப்புடன் விளையாடிய சூழலில், இறுதிக்கட்டத்தில் ரோவ்மன் பவல் 13 பந்துகளில் 26 ரன்கள் குவித்து நம்பிக்கை அளித்தார்.இறுதிக்கட்டத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய ஜாஸ் பட்லர், ஐபிஎல்லில் 7வது சதத்தையும், நடப்பு சீசனில் 2வது சதத்தையும் பூர்த்தி செய்தார். இதனால் 224 ரன்கள் இலக்கை கடைசி பந்தில் சேஸ் செய்த ராஜஸ்தான் அணி, ஐபிஎல் வரலாற்றில் அதிக இலக்கை துரத்திய அணி என்ற தமது சாதனையையும் சமன் செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்