மிட்செல் மார்ஷ்க்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்த டெல்லி அணி

Update: 2024-04-26 13:40 GMT

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் மார்ஷ், தசைப்பிடிப்பு காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இந்நிலையில் மிட்சல் மார்ஷூக்கு பதிலாக, ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் குல்பதின் நையிபை, 50 லட்சம் ரூபாய்க்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. சர்வதேச அளவில் 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள குல்பதின் நையிப், 3 அரைசதம் உட்பட 807 ரன்களும், 26 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்