அட்டகாசமான பேட்டிங் லைன் அப்.. ரன் வேட்டையில் RCB & KKR

Update: 2024-03-29 10:23 GMT

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 10வது லீக் போட்டியில் ஃபாஃப் டூபிளஸ்ஸி (faf duplessis) தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் கொல்கத்தா 18 முறையும் பெங்களூரு 14 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் அட்டகாசமான பேட்டிங் லைன்-அப்பை (line up) கொண்டிருப்பதால் பேட்டர்களுக்கு சாதகமான சின்னசாமி மைதானத்தில் இன்று ரன்வேட்டையை எதிர்பார்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்