பிசிசிஐக்கு கம்பீர் விதித்த கடுமையான நிபந்தனை | Gautam Gambhir | ThanthiTV

Update: 2024-05-27 02:39 GMT

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டிராவிட்டின் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், புதிய பயிற்சியாளருக்கான தேடலில் பிசிசிஐ மும்முரம் காட்டி வருகிறது. விவிஎஸ் லட்சுமண், பான்டிங், லாங்கர், ஸ்டீபன் ஃப்ளமிங் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்ட நிலையில், கௌதம் கம்பீரை பயிற்சியாளராக்க பிசிசிஐ ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், பிசிசிஐக்கு கம்பீர் கடுமையான நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. அதன்படி பயிற்சியாளராக கண்டிப்பாக தேர்வு செய்யப்படுவேன் என்ற உத்தரவாதத்தை அளித்தால் மட்டுமே, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என் கம்பீர் தெரிவித்துள்ளார். பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ஒருநாள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில், பிசிசிஐயின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்