`இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல` - பெரும் சிக்கலில் CSK

Update: 2024-05-10 06:24 GMT

ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற சென்னை அணிக்கு இந்த போட்டி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள குஜராத் அணிக்கு தொடரில் உயிர்ப்புடன் இருக்க, இந்த போட்டியில் வெற்றி அவசியமாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்