"கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டார் "தோனி" - வெ.இண்டீஸ் வீரர் பிராவோ புகழாரம்

கிரிக்கெட்டில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் யார் என்றால், அது தோனி தான் என வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோ புகழாரம் சூட்டியுள்ளார்.

Update: 2020-06-14 03:54 GMT
கிரிக்கெட்டில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் யார் என்றால், அது தோனி தான் என வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோ புகழாரம் சூட்டியுள்ளார். இன்ஸ்டாகிராம் உரையாடலில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மிக எளிதாக சந்தித்து பேசக்கூடிய வீரர்களில் தோனியும் ஒருவர் என்றும், அவரது அறைக் கதவு எந்த நேரமும் திறந்தே இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்குரிய எல்லா பெருமையும் கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஆகிய இருவரையுமே சாரும் என்றும், பிராவோ தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்