6 வயது சிறுவனுக்கு இளம் யோகா சாதனையாளர் விருது

ஈரோடு மாவட்டம் பவானியில் நோபல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் சார்பில் நடந்த விழாவில் சர்வதேச அளவில் யோகா போட்டிகளில் சாதனை புரிந்த 6 வயது சிறுவன் ஜித்தேஷூக்கு இளம் யோகா சாதனையாளருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Update: 2019-04-25 23:51 GMT
சிறுவன் ஜித்தேஷ் கடினமான யோகாசனங்களை பல நிமிடங்கள் தொடர்ந்து செய்து 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்' மற்றும் 'பதஞ்சலி புக் ஆஃப் ரெக்கார்டு ஆகியவற்றில் இடம் பிடித்துள்ளான். சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப்பதக்கங்களையும் வென்றுள்ளான் சிறுவன் ஜித்தேஷ். இது குறித்து சிறுவனின் தாயார் பேசுகையில் யோகாவை ஆரோக்கியத்தின் ஒரு பகுதியாக கருதி அனைவரும் கற்க வேண்டும் எனவும் பள்ளிகளில் யோகாவை கட்டாய பாடமாக்க வேண்டும் எனவும் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்