பாரா ஆசிய போட்டியில் வெள்ளி வென்ற தமிழக விவசாயியின் மகள்

பாரா ஆசிய போட்டியில் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த வீராங்கனை ரம்யா குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்...............

Update: 2018-11-30 07:17 GMT
சத்தியமங்கலத்தை அடுத்த நாகரணை கிராமத்தில் வசித்து வரும் விவசாயி சண்முகத்தின் மகள் ரம்யா. பிறவிலேயே இடது கையில் குறைபாடு உள்ள இவர், தேசிய, மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்களை குவித்துள்ளார். உயர்கல்வி படிப்புக்காக, சிறிது காலம் ஒதுங்கியிருந்த ரம்யா, கர்நாடகா மாநிலம் மைசூரில் பணிபுரிந்த போது, மீண்டும் விளையாட்டியில் கவனம் செலுத்தியுள்ளார்.

அயராத முயற்சியின் பலனாக  இந்தோனேசியா தலைநகர் ஜகர்தா நகரில் நடந்த 3வது பாரா ஆசிய போட்டிகளில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். வீராங்கனை ரம்யாவை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல உதவிகள் செய்து வருகின்றன. 2 ஆயிரத்து 20ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தனது ஆசை என வீராங்கனை தெரிவித்துள்ளார்.

சாதிப்பதற்கு உடல் குறை  ஒரு தடையல்ல என்பதை நிரூபித்த விவசாயியின் மகள் ரம்யா, உலக அளவிலான பல்வேறு போட்டியில் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும்....
Tags:    

மேலும் செய்திகள்