பிரபல மல்யுத்த வீரர் ரோமன் ரெய்ன்ஸ்க்கு புற்றுநோய் - ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல மல்யுத்த வீரர் ரோமன் ரெய்ன்ஸ், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.;
பிரபல மல்யுத்த வீரர் ரோமன் ரெய்ன்ஸ், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். WWE எனப்படும் 'பொழுது போக்கு' மல்யுத்த போட்டிகளில் களமிறங்கி உலக புகழ் பெற்றவர் ரோமன் ரெய்ன்ஸ். கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு மல்யுத்த போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், தாம் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், இனி மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
புற்றுநோய்க்கு சிகிச்சை எடுக்க உள்ளதாகவும், தமக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் ரோமன் ரெய்ன்ஸ் கூறியுள்ளார். ரோமன் ரெய்ன்ஸ் நலமுடன் திரும்ப வேண்டும் என்று பிரபல மல்யுத்த வீரர் JOHN CENA வும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.