ஹெப்டத்லான் பிரிவில் தங்கம் : ஏழ்மையை தாண்டி சாதித்து காட்டிய பெண்

பல்வேறு தடைகளை தாண்டி ஆசிய விளையாட்டு போட்டியில் ஹெப்டத்லான் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் ஸ்வப்னா பர்மன்

Update: 2018-08-31 03:33 GMT
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் தங்களின் தனித்துவமான திறமைகளால் பதக்கங்களை குவித்து வருகின்றனர். அந்த வரிசையில் ஹெப்டத்லான் பிரிவில் தங்கம் வென்று சாதித்துள்ளார் ஸ்வப்னா பர்மன். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர் பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்த பின்னரே இந்த உயரத்தை எட்டியிருக்கிறார்.

ஹெப்டத்லான் என்பது 100 மீட்டர் தடை ஓட்டம், 200 மீட்டர், 800 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் என 7 விளையாட்டுகளை உள்ளடக்கியது. இந்த அத்தனை விளையாட்டுகளிலும் ஈடுபட உடல் வலிமையும் கூடவே மன வலிமையும் அவசியம். அதற்கு தன்னை தயார் படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட ஸ்வப்னாவுக்கு பல்வேறு இடையூறுகள் பல வடிவங்களில் வந்தது. முதுகுவலி, பல் வலி என உடல் ரீதியான அவஸ்தைகளையும் பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி ஓடி, வெற்றிக் கனியை ருசித்திருக்கிறார் இந்த சாதனைப் பெண். 

22 வயதான இவரின் திறமை ஒரு பக்கம் இருந்தாலும் இவர்களின் ஏழ்மையான குடும்பம் அவருக்கு பெரும் தயக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவரின் திறமைக்கு சரியான அங்கீகாரம் கொடுத்து கை தூக்கி உதவியது கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டின் தொண்டு நிறுவனம் தான். நோயால் பாதிக்கப்பட்ட தந்தை, ஏழ்மையான குடும்ப சூழல், உடல் நல குறைபாடு என ஸ்வப்னா முன் இருந்த தடைக்கற்கள் ஒவ்வொன்றும் இன்று அவருக்கு மணி மகுடங்களாகவே மாறியிருக்கிறது.
Tags:    

மேலும் செய்திகள்