உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை 2-வது முறையாக வென்றது பிரான்ஸ்

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை 2-வது முறையாக வென்றது பிரான்ஸ்

Update: 2018-07-15 16:59 GMT
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை 2-வது முறையாக வென்றது பிரான்ஸ்

*குரோஷியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 4 - 2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி
* 20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை பிரான்ஸ் அணி வென்றுள்ளது
*உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு ரூ. 260 கோடி பரிசுத்தொகை.

ரஷ்யாவின் மாஸ்கோவில் நகரில் கலை நிகழ்ச்சியுடன் இறுதிப் போட்டி கோலாகலமாக தொடங்கியது. ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடனமாடி அசத்தினார்.இதனைத் தொடர்ந்து ரசிகர்களின் பெரும் கர ஓசையுடன் பிரான்ஸ், குரோஷிய அணிகள் இறுதி ஆட்டத்தில் களமிறங்கின.

ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் கிடைத்த ப்ரீ கீக் வாய்ப்பை கோலாக மாற்ற பிரான்ஸ் வீரர் கிரிஸ்மேன் அடித்த பந்தை குரோஷிய வீரர் மரியோ மண்சுகிச் தடுக்க முயன்ற போது, அவரது தலைப்பட்டு ஓன் கோலாக மாறியது.
அடுத்த 7 நிமிடங்களில் குரோஷிய அணிக்கு 2 கார்னர் கீக் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதனை குரோஷிய வீரர்கள் கோலாக மாற்ற முடியவில்லை. இருப்பினும் ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் கிடைத்த பிரீ கீக் வாய்ப்பை குரோஷிய அணியின் பெரிஷிச் கோலாக மாற்றினார்.இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பை கிடைத்தது. அதனை பிரான்ஸ் அணியின் கிரீஸ்மேன் கோலாக மாற்ற பிரான்ஸ் 2க்கு1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் போக்பாவும், 65வது நிமிடத்தில் இளம் வீரர் எம்பாப்பேவும் அடுத்தடுத்து 2 கோல் அடிக்க பிரைன்ஸ் அணி கோல் எண்ணிக்கை 4ஆக உயர்ந்தது.ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸ் செய்த தவறை பயன்படுத்தி குரோஷிய 2வது கோல் அடித்தது. இதன் பின்னர், இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாததால் பிரான்ஸ் அணி 4க்கு2 என்ற கோல் கணக்கில் வென்று 20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை வென்றது.  கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பிரான்ஸ் அணி வீரர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

உற்சாக வெள்ளத்தில் பிரான்ஸ் நாட்டு மக்கள் - திருவிழாக் கோலம் பூண்டது பாரீஸ் நகரம்

20 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் அணி உலகக் கோப்பை கால்பந்தில் வென்றதை தொடர்ந்து அந்நாட்டு மக்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரான்ஸ் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இறுதிப் போட்டி சிறப்பாக அமைந்ததாக  குறிப்பிட்டுள்ளார். குரோஷிய அணியும் நல்ல உத்வேகத்துடன் விளையாடியதாக மோடி பாராட்டு தெரிவித்தார். இதே போன்று பிரான்ஸ் அணியின் வெற்றிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் வாழ்த்து கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்