உலகக் கோப்பை கால்பந்து தொடரில் : ரஷ்யா வெற்றி பெறும் என டால்பின் கணிப்பு
இரண்டு நாட்டு கொடிகள் அடங்கிய அட்டை, நீச்சல் குளத்தில் வீசப்பட்டது....;
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரேஷியாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் ரஷ்ய அணி வெற்றி பெறும் என்று டால்பின் கணித்துள்ளது. ரஷ்யாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இரண்டு நாட்டு கொடிகள் அடங்கிய அட்டை, நீச்சல் குளத்தில் வீசப்பட்டது. அதில் ரஷ்ய கொடி அடங்கிய அட்டையை கவ்வியபடி டால்பின் கரைக்கு வந்தது. மற்றொரு டால்பின் குரோஷியாவை தேர்வு செய்தது.ஆனால், அது கரைக்கு இரண்டாவதாக வந்ததால் ரஷ்யா வெற்றி பெறும் என டால்பின் கணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.