"மகளிருக்கு ரூ. 1000 நிச்சயம் வழங்கப்படும்" - உதயநிதி ஸ்டாலின்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்;
திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதய நிதி ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட நாகர்கோவில் மாநகராட்சி, நான்கு நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.