"இந்திய மக்களை கடத்தும் சீன ராணுவம்" - "நல்ல நாளுக்காக மௌனம் காக்கும் பிரதமர்" - ராகுல் சாடல்

இந்திய மக்களை சீன ராணுவம் கடத்துவதாக புகார் எழுந்தும் கூட, பிரதமர் மோடி நல்ல நாளுக்காக மெளனம் காப்பதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.;

Update: 2022-02-03 11:25 GMT
அருணாச்சல் பிரதேச மக்களை சீன ராணுவம் கடத்துவதாக புகார் எழுந்தும் கூட, பிரதமர் மோடி நல்ல நாட்களுக்காக மெளனம் காப்பதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

பாஜக எம்பி தபீர் காவோ இது தொடர்பாக அளித்த பேட்டி ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ளது. 

இதனை மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, முதலில் இந்திய நிலத்தை ஆக்கிரமித்த சீன ராணுவம், தற்போது இந்திய குடிமகன்களை கடத்தி சித்திரவதை செய்வதாக செய்தி வெளியாகியுள்ள விவாகரத்தில் பிரதமர் நடவடிக்கை எடுக்காதது ஏன் என கடுமையாக சாடியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்