தொகுதி மக்களுக்குப் பொங்கல் பரிசு... நேரில் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்
சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு திமுக இளைஞரணி செயலாளரும், அத்தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பொங்கல் பரிசுகளை நேரில் வழங்கினார்.;
சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு திமுக இளைஞரணி செயலாளரும், அத்தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பொங்கல் பரிசுகளை நேரில் வழங்கினார். சிந்தாதிரிப்பேட்டை, மே தின பூங்கா, புதுப்பேட்டை, கொய்யாதோப்பு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு வேட்டி, சேலை அடங்கிய பொங்கல் பரிசினை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின்னர் அவர் சிறுவர்கள், குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், திமுக எம்பி தயாநிதி மாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.