"அய்யனார் போல் மக்களை பாதுகாக்கிறார், பிரதமர்"
சிறப்பான நடவடிக்கை மூலம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்திய பிரதமர் மோடியை மதுரை வீரனாக பார்ப்பதாக அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.;
சிறப்பான நடவடிக்கை மூலம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்திய பிரதமர் மோடியை மதுரை வீரனாக பார்ப்பதாக அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். ஒமிக்ரான் வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய நவநீதகிருஷ்ணன், மத்திய அரசு மக்களின் உயிரை காப்பாற்ற மிகச்சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், ஒவ்வொரு உயிரும் பிரதமர் மோடியால் பாதுகாக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். இதற்கிடையே நவநீதகிருஷ்ணன் பேசிக்கொண்டிருந்தபோது திமுக எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.