தோ்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தமது பதவியை ராஜினாமா செய்தார் முல்லபள்ளி ராமச்சந்திரன்

சட்டப் பேரவைத் தோ்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார் கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவா் முல்லபள்ளி ராமச்சந்திரன்.;

Update: 2021-05-30 08:09 GMT
தோ்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தமது பதவியை ராஜினாமா செய்தார் முல்லபள்ளி ராமச்சந்திரன்

சட்டப் பேரவைத் தோ்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார் கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவா் முல்லபள்ளி ராமச்சந்திரன்.கேரள மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 41 இடங்களில் வெற்றி பெற்றது. இதுவரை,  மாறி மாறி ஆட்சியை அமைத்து வந்த நிலையில், இந்த முறை மார்க்சிஸ்ட் கூட்டணி தொடா்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை அமைத்து திருப்புமுனையை உருவாக்கி உள்ளது.  இந்த நிலையில்,  எதிர்க் கட்சித் தலைவா் பதவியை பெற ரமேஷ் சென்னிதலா தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆனால், காங்கிரஸ் மூத்த தலைவா் வி.டி.சதீசனனை கட்சி தலைமை நியமித்தது. இந்த அறிவிப்பு வெளியானதை தொடா்ந்து, தமது  பதவியை ராஜினாமா செய்வதாக முல்லபள்ளி ராமச்சந்திரன் அறிவித்தார். இந்நிலையில், தோ்தலுக்கு பின்னர் நடந்த ஐக்கிய ஜனநாயக முன்னணியின் முதல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் முல்லபள்ளி ராமச்சந்திரன் பங்கேற்கவில்லை. இதுகுறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு,  தோ்தல் தோல்விக்குப் பிறகு விரிவான அறிக்கையை கட்சித் தலைவா் சோனியா காந்திக்கு அனுப்பியிருக்கிறேன் என்றும், மாநில தலைவா் பதவியில் தொடர விருப்பமில்லை என்பதையும் அதில் தெரிவித்து உள்ளதாகவும் கூறினார். ராஜினாமா விருப்பத்தை தெரிவித்திருக்கும் நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்பது பொருத்தமாக இருக்காது எனவும்,  தோல்விக்கு தாம் முழு பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்