இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் காலமானார்

இந்து முன்னணி அமைப்பின் நிறுவனரான ராம கோபாலன் சென்னையில் இன்று காலமானார்.

Update: 2020-09-30 12:17 GMT
இந்து முன்னணி அமைப்பின் நிறுவனரான ராம கோபாலன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 94.  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ராம கோபாலன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே அவருடைய உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து இன்று அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. 

Tags:    

மேலும் செய்திகள்