"காங்.காரிய கமிட்டி உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வாக வேண்டும்" - காங்.எம்.பி. குலாம் நபி ஆசாத் வலியுறுத்தல்
ஒட்டு மொத்த காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தியுள்ளார்.;
காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி செயல்பாடுகளில் உண்மையான அக்கறை உள்ளவர்கள், காரியக் கமிட்டிக்கு தேர்தல் நடத்தி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முன்மொழிவை வரவேற்பார்கள் என அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியை வலுவானதாகவும், செயல் திறனுடையதாகவும், மாற்றவே காரியக் கமிட்டிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு தேர்தல் நடத்தி, அதன் உறுப்பினர்களின் பதவிக்காலத்தை நிர்ணயித்தால் என்ன தீங்கு நேர்ந்து விடும் என்றும் குலாம் நபி ஆசாத், கேள்வி எழுப்பியுள்ளார்.