ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் தலைவராக்க முடிவு?

ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்று சோனியா காந்தியிடம் அக்கட்சி மாநிலங்களவை எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2020-07-31 03:16 GMT
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி  கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி , நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்காக விரைவில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்