கொரோனா தடுப்பு - பிரதமர் காணொலி மூலம் உயர்மட்ட ஆலோசனை
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.;
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்தினார். வீட்டில் இருந்தவாறு காணொலி மூலம் நடத்திய கூட்டத்தில், கொரோனாவை ஒழிப்பது மற்றும் அது குறித்த ஆய்வில் இந்தியாவின் பங்கை எடுத்துரைத்த பிரதமர் மோடி, சரியான நேரத்தில் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய, அது சார்ந்த கருவிகளை மதிப்பீடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.