கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு - வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

காங்கிரஸ் எம்.பி, கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Update: 2020-05-12 10:08 GMT
சென்னை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள சொத்துக்கள் விற்பனை மூலம் பெற்ற 7 கோடியே 73 லட்ச ரூபாயை வருமான வரி கணக்கில் காட்டாமல் மறைத்ததாக கூறி, கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி மீது, வருமான வரித்துறை 2018 ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. தங்களுக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்யக்கோரியும் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை  நீதிபதி எம்.சுந்தர் முன் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தள்ளி வைத்திருந்த நீதிபதி, இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்