டெல்லி கலவரத்தில் ஆம் ஆத்மி கவுன்சிலருக்கு தொடர்பு? - ஆம் ஆத்மி கவுன்சிலர் மீது கெஜ்ரிவால் நடவடிக்கை

டெல்லி கலவரம் தொடர்பாக ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-02-28 02:08 GMT
டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது.  200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந் நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கலவரத்தின் பின்னணியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இருப்பதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளதாக கூறினார். ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலர் தாஹிர் உசேன் வீட்டில் இருந்து ஏராளமாக வெடிமருந்துகள் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார். இதன் தொடர்ச்சியாக, ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது, 365 மற்றும் 302 பிரிவுகளின் கீழ், கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்து கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், பதற்றம் தணிந்துள்ளதால் வட கிழக்கு டெல்லியில் இன்று 10 மணி நேரம் மட்டும் 144 தடை உத்தரவை தளர்த்துவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனிடையே, பதற்றத்தை தூண்டும் வகையில், சில தீய சக்திகள் பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்