"அரிக்கமேடு அகழ்வாய்வு இடத்தை பாதுகாக்க வேண்டும்" - மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. கோரிக்கை

புதுச்சேரி அரிக்கமேடு அகழ்வாய்வு இடத்தை உலக பாரம்பரிய இடமாக அறிவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. கோகுலகிருஷ்ணன் கோரியுள்ளார்.

Update: 2019-12-04 09:02 GMT
புதுச்சேரி அரிக்கமேடு அகழ்வாய்வு இடத்தை உலக பாரம்பரிய இடமாக அறிவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. கோகுலகிருஷ்ணன் கோரியுள்ளார். மேலும்,  அங்கு ஒரு அருங்காட்சியகம் அமைக்கும், அதே நேரத்தில், ஒருங்கிணைந்த புதிய அகழாய்வு பணிகளை தொடங்க வேண்டும் எனவும் கோகுலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார். அரிக்கமேடு நாகரிகம் கி.பி. முதல் நூற்றாண்டை சார்ந்தது என்றும்,  34 புள்ளி 57 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அந்த இடம் பாதுகாக்கப்படாமலும்,  மண் அரிப்பு மற்றும்  ஆக்கிரமிப்பினால்  பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அ.தி.மு.க. எம்.பி. கோகுலகிருஷ்ணன் சுட்டிக்காட்டி உள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்