"27% இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை" - மக்களவையில் திமுக எம்.பி.டி.ஆர்.பாலு புகார்

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுவதில்லை என திமுக எம்.பி டி.ஆர். பாலு புகார் தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-21 13:09 GMT
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுவதில்லை என திமுக எம்.பி டி.ஆர். பாலு புகார் தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர், 2017 ஆம் ஆண்டு மாநிலங்கள், மத்திய தொகுப்புக்கு ஒதுக்கிய  9 ஆயிரத்து 966 மருத்துவ இடங்களில் 27 சதவீத ஒதுக்கீட்டின் படி பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 2 ஆயிரத்து 689 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார். ஆனால் 266 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.  அதேபோல 2018-2019 ஆண்டின்படி, மத்திய தொகுப்புக்கு மாநிலங்கள் ஒதுக்கிய மொத்த இடங்கள் 12 ஆயிரத்து 595 என்றார். ஆனால், 27 சதவீத இட ஒதுக்கீட்டின் படி பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது 299 இடங்கள் மட்டுமே என அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்