நடிகர் கமலுக்கு, கவுரவ டாக்டர் பட்டம் : ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் வழங்கினார்

நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார்.

Update: 2019-11-19 13:15 GMT
நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார். ஒடிசா மாநிலத்தில் உள்ள செஞ்சுரியன் தொழில்நுட்ப மேலாண்மை பல்கலைக்கழகம்,  கமலுக்கு டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்தது. கமலின் சினிமா பயணம், கலாசாரம் மற்றும் கலை ஆகியவற்றின் பங்களிப்புக்காக விருது வழங்கி பாராட்டுவதாக பல்கலைக்கழகம் விளக்கம் அளித்தது. இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், கமல்ஹாசனுக்கு கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்