குழந்தைகள் தொடர்பான 1,344 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது - அமைச்சர் சரோஜா

குழந்தைகள் கடத்தல் தொடர்பாக இதுவரை ஆயிரத்து 568 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆயிரத்து 344 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-04 07:44 GMT
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ,மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, குழந்தைகள் கடத்தல், பாலியல் தொல்லை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும்,  எனவே குழந்தைகள் நலவாரியம் அமைப்பதுடன்,  அந்த வாரியத்திற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கி குற்றங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரினார்.  இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சரோஜா, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டு, கடந்த  ஆண்டு மார்ச் மாதம் வரை, ஆயிரத்து 568 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆயிரத்து 344 வழக்குகள் தீர்வு காணப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும், ஆணையத்திற்கும் வாரியத்திற்கும் ஒரே அளவு அதிகாரம் என்பதால் உறுப்பினரின் கோரிக்கை பரிசீலிக்கப்பட வேண்டியதில்லை என்றும் அமைச்சர் சரோஜா பதிலளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்