18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : அக்டோபர் 22-ம் தேதிக்கு பிறகு தீர்ப்பு?

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் அக்டோபர் 22-ம் தேதிக்கு பிறகே தீர்ப்பு வர வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Update: 2018-10-09 21:23 GMT
முதல்வர் மீது நம்பிக்கையில்லை எனவும், அவருக்கு அளித்த ஆதரவை விலக்கி கொள்வதாகவும் ஆளுநருக்கு கடிதம் கொடுத்த தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்கத்தமிழ் செல்வன் உள்பட 18 பேரின் எம்.எல்.ஏ. பதவியை  தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து 18 பேரும் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இருவேறு தீர்ப்புகளை வழங்கியதால்   வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சத்தியநாராயணனை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஜூலை மாதம் துவங்கி, 12 நாட்கள் வழக்கறிஞர்கள் வாதம் நடந்தது.  வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பு இந்த மாதத்தில் வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் நாளை  முதல் நீதிபதி சத்தியநாராயணன் விடுமுறையில் செல்வதாலும், 13ம் தேதி முதல் 21-ம் தேதி வரை உயர்நீதிமன்றத்திற்கு தசரா விடுமுறை என்பதாலும் 22-ம் தேதிக்கு பிறகே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்