எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு ஸ்டாலினை அழைப்பது அரசின் கடமை - மாஃபா பாண்டியராஜன்...

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அரசு நிகழ்ச்சி எனவும் அதற்கு ஸ்டாலினை அழைப்பது அரசின் கடமை என மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-24 08:19 GMT
* எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50ஆம் ஆண்டு பொன் விழா அழைப்பிதழில் ஸ்டாலின், தினகரன் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50ஆம் ஆண்டு பொன் விழா வரும் 30-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ளது.  

* நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் இவ்விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.  வாழ்த்துரை வழங்குவோர் பட்டியலில்  திமுக தலைவர்  ஸ்டாலின்,  தினகரன் உள்ளிட்ட பலரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. 

"ஸ்டாலினை அழைப்பது அரசின் கடமை"

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அரசு நிகழ்ச்சி எனவும் அதற்கு ஸ்டாலினை அழைப்பது அரசின் கடமை எனவும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்