நிதி ஆயோக் அறிக்கைக்கு ப.சிதம்பரம் கண்டனம்

வங்கிகளை விட, கைகளில் பணம் இருப்பதையே பாதுகாப்பாக மக்கள் கருதுவதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-01 03:13 GMT
பண மதிப்பிழப்புக்கு பிறகு பணப் பரிவர்த்தனைகள் குறைந்துள்ளதாகவும், பணமில்லா பரிவர்த்தனைக்கு பண மதிப்பிழப்பு உதவியதாகவும், 'நிதி ஆயோக்' அமைப்பு தெரிவித்திருந்தது. இதற்கு சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டபோது, சுமார் ஒன்று புள்ளி 4 சதவீதத்துக்கு அதிகமான பணம், மக்களின் கைகளில் ரொக்கமாக இருந்ததாக தெரிவித்தார். வங்கிகளில் பணத்தை வைப்பதில் மக்களுக்கு நம்பிக்கை குறைவாக உள்ளதாகவும், கைகளில் இருப்பதையே வசதியாக கருதுவதாகவும் ப.சிதம்பரம் குறிப்பிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்